‘கத்தி’ அனுகிருஷ்ணா ஹீரோயினானார்!

‘கத்தி’ அனுகிருஷ்ணா ஹீரோயினானார்!

செய்திகள் 18-Feb-2015 2:11 PM IST VRC கருத்துக்கள்

எம்.குப்பன் பெருமையுடன் வழங்க, ‘குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ வெள்ள காக்கா மஞ்ச குருவி’. இப்படத்தில் அறிமுகம் கார்த்திக் தாஸ் கதாநாயகனாக நடிக்க, ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அணுகிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை எழுதி இயக்குபவர் எஸ்.கே.முரளீதரன். படம் பற்றி இயக்குனர் எஸ்.கே.முரலீதரனிடம் கேட்டோம். ‘‘கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு பணக்கார பெண் ஒருவள் மீது காதல் வருகிறது. அதனால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பொறுப்பில்லாமல் இருந்த அவன் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்னை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ஊரே அவனை மெச்சுகிறது. அவனது காதல் ஜெயித்ததா? என்பதை கமர்ஷியலாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இருக்கு’’ என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, அரக்கோணம், சோளிங்கர், ஊட்டி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. பவ விஜய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் சாய்தர்சன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ இன்று காலை வெளியானது.

Key News:
Anu Krishna who was seen earlier in the movie Kaththi as Vijay sisiter has been signed as heroine in the movie Vella Kakka Manja Kuruvi.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிச்சுவாகத்தி - என்ன சொன்ன பாடல் வீடியோ


;