விக்ரமுடன் இணையும் நயன்தாரா!

விக்ரமுடன் இணையும் நயன்தாரா!

செய்திகள் 18-Feb-2015 1:41 PM IST VRC கருத்துக்கள்

‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்! நயன்தாரா கைவசம் இப்போது ‘மாயா’, ‘நண்பேன்டா’, ‘இது நம்ம ஆளு’, ‘தனி ஒருவன்’ ‘மாஸ்’, ‘நானும் ரௌடிதான்’, மலையாள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என எக்கச்சக்க படங்கள் இருக்கிற நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கும் படம் மூலம் விக்ரமுடன் முதன் முதலாக ஜோடி சேர இருக்கிறார் நயன்தார! தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த நயன்தாரா, இது வரை கமல்ஹாசன், விக்ரமுடன் ஜோடி சேராமல் இருந்தார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகியதன் மூலம் இனி கமல்ஹாசன் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவருடனும் நயன்தாரா விரைவில் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்ப்போம்! விக்ரம் தற்போது நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்!

Key News:
Nayanthara Joins Vikram for the 1st time after pairing with almost all the leading stars. Movie is directed by Anand Shankar of Arima Nambi fame.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;