‘பிரம்மாண்ட சண்டமாருதம்’ - சரத்குமார் ஸ்பெஷல் பேட்டி

‘பிரம்மாண்ட சண்டமாருதம்’ - சரத்குமார் ஸ்பெஷல் பேட்டி

கட்டுரை 18-Feb-2015 12:06 PM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் ‘சண்டமாருதம்’. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். வருகிற 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க இப்படம் வெளியாகவிருக்கிறது. அது சம்பந்தமாக நடந்து வரும் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இயங்கி வரும் சரத்குமார் ‘சண்டமாருதம்’ குறித்து ‘டாப் 10 சினிமா’வுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டி இது.

மீண்டும் டபுள் ரோல்... வில்லன் கேரக்டர்... என்று களம் இறங்கியிருக்கீங்களே?

சமீபகாலமாக நான் அரசியலிலும் ஈடுபட்டு வந்ததால சினிமா, நடிப்பு என அவ்வளவாக கவனம் செலுத்த முடியலை. ஒருசில படங்களில் கேமியோ ரோல்கள் பண்ணேன்! இதனை தொடர்ந்து என் ரசிகர்களும், என்னோட வெல்விஷர்ஸும் எனக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சாங்க! ஏன் அப்பல்லாம் நடிச்ச மாதிரி முழு படங்கள்ல நடிக்க கூடாதுன்னு கேட்க ஆரம்பிச்சாங்க! அவங்களுக்காக துவங்கின படம்தான் இது! இப்படத்துல ஹீரோ, வில்லன்னு ரெண்டு கேரக்டர் பண்ணியிருக்கேன்! ஏற்கெனவே நான் டபுள் ரோல்ல நடிச்ச படங்கள் வெற்றி பெற்றதால இது அந்த சென்டிமென்டானு நினைக்க வேண்டாம்! வித்தியாசமா ஏதாவது பண்ணனும்னு தோணிருச்சு! அதுக்கேத்த மாதிரி ஒரு கதையும் அமைஞ்சிருச்சு! அதனால இதுல ஹீரோ, வில்லன்னு டபுள் கேரக்டர் பண்ணியிருக்கேன்!

இந்த படத்தோட கதையை நீங்களே எழுதியிருக்கீங்களாமே?

ஆமாம்! கதை என்னோடதுதான்! அதுக்கு ராஜேஷ்குமார் திரைக்கதை வடிவம் கொடுத்துள்ளார்! கும்பகோணத்தையே தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டு அடாவடித்தனம் செஞ்சு வரும் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலுக்கும் அவனுக்கு எதிராக களம் இறக்கப்படும் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரிக்குமான கதை இது. ஹீரோ கேரக்டருக்கு நிகரானது வில்லன் கேரக்டர்! போலீஸ் அதிகாரி - பவர்ஃபுல்லான வில்லன் என யோசித்தபோது வித்தியாசமா ரெண்டையும் நானே பண்ணினா என்னானு தோணிருச்சு! அதுனால ரெண்டு கேரக்டரையும் நானே பண்ணினேன்! அத்துடன் படத்துக்கான ஒரு பாடலையும் நானே பாடியிருக்கேன்! படத்தை ஏ.வெங்கடேஷ் ஆக்ஷன், காமெடி, ஃபேமிலி, சென்டிமென்ட்னு அனைத்து தரப்பினருக்குமான அம்சங்களுடன் இயக்கவும் செய்துள்ளார். படத்தை பார்த்தவங்கல்லாம், ‘படம் சூப்பரா வந்திருக்கு! இது எல்லா மொழிக்குமான படம்’னு சொன்னாங்க! அதனால இப்படத்தை உலகளவில பெரிய அளவில ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உலக அளவில் ரிலீஸ் என்றால், எவ்வளவு தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகும்?

இதுவரை நான் நடிச்ச எந்தப் படத்தையும் உலகளவுல ரிலீஸ் பண்ணினதில்லை. இப்பல்லாம் ஒரு படத்தை உலக அளவு மார்க்கெட்டை மனதில் வைத்துக் கொண்டு எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு! அதனால் இப்படத்தை பெரிய அளவுல ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்! தமிழ்நாட்டுல் மட்டும் 275க்-கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம். இது தவிர மும்பையில 20 தியேட்டர், கேரளாவுல 25 தியேட்டர், கர்நாடகாவுல 25 தியேட்டர், டெல்லியில 5 தியேட்டர், மலேசியா சிங்கப்பூர், துபாய் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாக இருக்கு! இங்கு ரிலீசாகி ஒரு வாரம் கழித்து ஆந்திராவுல இதோட தெலுங்கு வெர்ஷன் வெளியாக இருக்கு. இது தவிர ஜப்பானிலும் சப் டைட்டிலோட இப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கோம். ஏற்கெனவே நாங்க தயாரித்த ‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை ஜப்பான் மொழி சப் டைட்டிலோடு அங்கு வெளியிட்டு கலெக்ஷன் பார்த்திருக்கோம். அதனால இப்படத்தையும் ஜப்பான்ல வெளியிட இருக்கோம்’’ என்றார் சரத்குமார் பெரும் மகிழ்ச்சியுடன்!

‘சண்டமாருதம்’ என்றால் புயலை தாண்டிய காற்று என்று அர்த்தமாம்! புயலை போன்ற வில்லனை தென்றல் போன்ற போலீஸ் அதிகாரி எப்படி தாக்குகிறார் என்பதை வித்தியாசமான முறையில் இப்படத்தில் சித்தரித்துள்ளாராம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்! இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் ராதாரவி, சமுத்திரகனி, நளினி, நரேஷ்குமார், அருண் சாகர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ‘காதல்’ தண்டபாணி, சிங்கம் புலி, ஆதவன், டெல்லி கணேஷ், ஜி.எம்.குமார், எம்.என்.கே.நடேசன், மோகன் ராம், கண்ணன், ராம்குமார், வின்செண்ட் அசோகன், கே.ஆர்.செல்வராஜ், கராத்தே ராஜா, கானா உலகநாதன், சந்தானபாரதி, ரேகா சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவுக்கு என்.எஸ்.உதயகுமார், இசைக்கு ஜேம்ஸ் வசந்தன், எடிட்டிங்குக்கு வி.டி.விஜயன், அதிரடி சண்டை காட்சிகளுக்கு வி.சிவகுமார் என பெரும் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘சண்டமாருதம் படம் சரத்குமார் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமான படமாம்! சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த படங்களின் வெற்றி சென்டிமென்ட் இப்படத்திலும் தொடரும் என்ப்து நிச்சயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது என்ன மாயம் - டிரைலர்


;