சிம்பு படத்திற்குப் பிறகு கௌதம் மேனனின் அடுத்த திட்டம்?

சிம்பு படத்திற்குப் பிறகு கௌதம் மேனனின் அடுத்த திட்டம்?

செய்திகள் 18-Feb-2015 11:17 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தை ரிலீஸ் செய்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். இப்படத்தைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஏற்கெனவே துவங்கிய படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கவிருக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பல்லவி சுபாஷ் நடிக்கும் இப்படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற டைட்டிலை பதிவு செய்ய நினைத்தார் கௌதம். ஆனால் இதே பெயரில் வேறொரு நிறுவனமும் தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பதால் அந்த தலைப்பைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் இப்படத்திற்கு வேறு டைட்டில்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று ‘காற்று வாங்க போனேன்... கவிதை வாங்கி வந்தேன்’.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம், சிம்புவுடன் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். வரும் 21ஆம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. மொத்த படப்பிடிப்பையும் 2 மாத காலத்திற்குள் விரைவாக முடித்துவிட்டு படத்தை ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் விக்ரமை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல் அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்கும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கிறார் கௌதம்.

Key News:
Simbu - Gautham's project will resume its shoot on Feb 21st and they are planning to release the movie in summer holidays.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;