விக்ராந்த்துக்கு அடித்த ஜாக்பாட்!

விக்ராந்த்துக்கு அடித்த ஜாக்பாட்!

செய்திகள் 18-Feb-2015 10:52 AM IST Chandru கருத்துக்கள்

விக்ராந்த் என்றவுடன் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது நட்சத்திர கிரிக்கெட் போட்டிதான். அந்தளவுக்கு மனிதர் அதில் பட்டையைக் கிளப்பி வருகிறார். பல போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றிருக்கிறார். ‘கற்க கசடற’ படத்தின் மூலம் 2005ஆம் வருடமே நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் களமிறங்கிவிட்டாலும், பெரிய அளவில் அவரால் திரையுலகில் பிரகாசிக்க முடியவில்லை. கடைசியாக விஷாலுடன் ‘பாண்டியநாடு’ படத்தில் அவர் செய்திருந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

இந்நிலையில் மீண்டும் விக்ராந்திற்கு சூப்பரலான ரோல் ஒன்று கிடைத்திருக்கிறது. ‘மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி, எமி ஜாக்ஸன் நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் விக்ராந்த். ஆக்ஷன் ரொமான்ஸ் படமாக உருவாகவிருக்கும் இதனை ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Key News:
Vikranth has been signed for an important role in Maan Karate fame Thirukumaran's venture which has Udhayanidhi and Amy in the lead. Music by Harris Jayaraj.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;