அஜித், விஜய் பட விநியோகஸ்தர் கையில் ‘காக்கி சட்டை’!

அஜித், விஜய் பட விநியோகஸ்தர் கையில் ‘காக்கி சட்டை’!

செய்திகள் 18-Feb-2015 10:13 AM IST Chandru கருத்துக்கள்

அடுத்தடுத்து ஒவ்வொரு ஸ்டெப்பையும் ஸ்டெடியாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக விலைபோனது. இப்போது தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 27ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘காக்கி சட்டை’ படத்தையும் நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறது மதனின் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம். இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனின் இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

‘காக்கி சட்டை’யின் கோயமுத்தூர் விநியோக உரிமையை ‘காஸ்மோ ஃபிலிம்ஸ்’ சிவா கைப்பற்றியிருக்கிறார். இவரது நிறுவனம் பெரும்பாலும் அஜித், விஜய் படங்களையே அதிகளவில் வாங்கி வெளியிடும். விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘கத்தி’, அஜித்தின் ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களை சிவாதான் வாங்கி வெளியிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் படத்தை இவர் வாங்கியிருப்பதால் கோயமுத்தூரில் ‘காக்கி சட்டை’க்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த ஏரியாவில் மட்டும் குறைந்தது 45 திரையரங்குகளிலாவது இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளியாகும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் கேரியரில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.

Key News:
Kakki Sattai's Coimbatore distribution rights has been given to Cosmo films Siva. Siva is well known for distributing Arrambam, Yennai Arindhaal, Thuppaki, Jilla and Kaththi.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;