மார்ச்சில் மீண்டும் களத்தில் இறங்குகிறது ‘விஜபி’ டீம்!

மார்ச்சில் மீண்டும் களத்தில் இறங்குகிறது ‘விஜபி’ டீம்!

செய்திகள் 17-Feb-2015 3:35 PM IST RM கருத்துக்கள்

‘அனேகன்’ படம் வெளியான முதல் 3 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார். அதோடு வரும் 20ஆம் தேதி இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அனேகுடு’ வெளியாகவிருக்கிறது. தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் வடசென்னை தாதாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’ வேல்ராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் முதல் முறையாக இணைகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மார்ச்சில் துவங்கவிருக்கிறதாம். ‘விஐபி’யைப் போலவே இப்படமும் தனுஷுக்கு பெரிய மாஸ் இமேஜை உருவாக்கித்தரும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;