விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

செய்திகள் 17-Feb-2015 11:46 AM IST VRC கருத்துக்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தை பி.டி.செல்வகுமாரும், ஷிபுவின் தமீன்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் இது என்பதாலும் ‘கத்தி’யை போல இப்படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதால் இப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்! இந்நிலையில் ‘புலி’யை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட்டால் அது விஜய் ரசிகர்களுக்க் பிறந்த நாள் பரிசாக அமையும் என்பதால் ‘புலி’யை ஜூன் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;