இன்னும் பல உயரங்களைத் தொட ‘காக்கி சட்டை’ நாயகனுக்கு வாழ்த்துக்கள்!

இன்னும் பல உயரங்களைத் தொட ‘காக்கி சட்டை’ நாயகனுக்கு வாழ்த்துக்கள்!

செய்திகள் 17-Feb-2015 10:23 AM IST Chandru கருத்துக்கள்

இப்போதுதான் ‘அது இது எது’ நிகழ்ச்சியிலிருந்து சினிமாவிற்குள் வந்ததுபோல் இருக்கிறது.... அதற்குள் 3 வருடங்களைக் கடந்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த 3 வருடங்களில் அவர் நடித்திருப்பது மொத்தமே 6 படங்கள்தான். அதில் ‘3’ படத்தில் மட்டும் காமெடியனாக நடித்திருந்தார். மற்றவை அனைத்திலும் ஹீரோ சிவகார்த்திகேயன்தான். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த எந்தப் படமும் இதுவரை சோடை போனதில்லை என்பதுதான் சினிமா விமர்சகர்கள் அவரை ஆச்சரியமாக பார்க்கும் விஷயம். அதோடு அவை ஓரளவுக்கு லாபம் தந்த படங்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

இன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக சிவகார்த்திகேயனின் படங்களுக்கும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்கிறது. அதோடு ‘மெரினா’வில் சாதாரணமாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு இப்போது மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த அவரின் ‘காக்கி சட்டை’ பட டிரைலரை இதுவரை 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு டியூப்பில் கண்டுகளித்துள்ளனர். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் பட டீஸர்களுக்குதான் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும். இப்போது சிவகார்த்திகேயனும் அந்த இடத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்.

27ஆம் தேதி வெளியாகும் ‘காக்கி சட்டை’ படம் பெரிய வெற்றியைப் பெறும் பட்சத்தில் இன்னும் பல உயரங்களுக்கு சிவகார்த்திகேயன் பயணிப்பார் என்பது உண்மை. இன்று (பிப்ரவரி 17) அவரின் பிறந்தநாள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தர ரசிகர்களையும் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு ‘டாப் 10 சினிமா’ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;