‘லிங்கா’ போராட்டம்… தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை!

‘லிங்கா’ போராட்டம்… தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை!

செய்திகள் 16-Feb-2015 4:54 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’ படத்தால் தங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது எனக் கூறி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சில விநியோகஸ்தர்கள், தங்களது அடுத்த கட்ட போராட்டமாக ரஜினி வீட்டின் முன் மெகா பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக சமீபத்தில் ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
‘‘லிங்கா’ படப் பிரச்சனையில் விநியோகஸ்தர்கள் பட வெளியீட்டிலிருந்து தொடர்ந்து ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி பல்வேறு பிரச்சனைகள் செய்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் திரு.ரஜினிகாந்த அவர்கள் நடித்த சுமார் 97 சதவிகித படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டி தந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ‘லிங்கா’ படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள் சம்பந்தபட்ட சங்கத்தில் தெரிவித்து, அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும். அதை விடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், திரு.ரஜினிகாந்த அவர்களையும் இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது நமது தொழில் தர்மத்துக்கு மாறானது. மேலும் அது கண்டனத்திற்குரியது. மேலும் திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பார்பட்டது. தேவையற்ற முறையில் இந்த பிரச்சனையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கி கொள்வது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

எனவே உண்மையில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது திரையுலகிற்கு செய்யும் மிகப் பெரிய நன்மையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;