‘ஹரிதாஸ்’ பட இயக்குனருடன் கை கோர்க்கும் விக்ரம் பிரபு!

‘ஹரிதாஸ்’ பட இயக்குனருடன் கை கோர்க்கும் விக்ரம் பிரபு!

செய்திகள் 16-Feb-2015 3:56 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் ரிலீசான ’வெள்ளக்கார துரை’ நல்ல வசூலை குவித்த படமாகும்! இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறாது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு “வாகா’ (WAGAH) என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குகிறார். ‘விஜயபார்கவி ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. அங்கு தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த படத்தில் மும்பை அழகி ஒருவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வருமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;