பெரிய திரைக்கு வரும் சின்னத்திரை இயக்குனர்!

பெரிய திரைக்கு வரும் சின்னத்திரை இயக்குனர்!

செய்திகள் 16-Feb-2015 3:20 PM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரி க்கும் படம் ‘அகத்திணை’. இப்படத்தில் கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், ஜி.எம்.குமார், ஜார்ஜ், ‘லொள்ளுசபா’ மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன், பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வா வாசு, மாஸ்டர் அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர். ஸ்ரீகாந்தும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படதின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி யு.பி. மருது இயக்குகிறார். இவர் சன் டிவியில் ஒலிபரப்பான ‘அத்திப்பூகள்’ தொடரை இயக்கியவர். ‘அக்த்திணை’ படம் பற்றி இயக்குனர் இயக்குனர் மருது கூறியவை:
‘‘ காதலுக்காக எதையும் இழக்கலாம், காதலை தவிர என்பதை உணர்வுபூர்வமாக சொல்லக்கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதையே இந்த ‘அகத்திணை’. பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றி அகத்திணையில் பாடப்படுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று ‘அகத்திணை’ என்று பெயர் வைத்தோம். படம் பார்த்த தணிக்கைகுழு அதிகாரிகள் குடும்பத்தோடு பார்க்ககூடிய மனதை தொட்ட உணர்வு பூர்வமான காதல் கதை என்று பாராட்டி படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்தனர். படத்தில் பாடல்கள் அனைத்தையும் கவிபேரரசு வைரமுத்து எழுதி இருக்கிறார். அதில் தந்தைக்கும் மகளுக்குமான உறவை, அன்பை, பாசத்தை மிக அழகாக சொல்லும் ஒரு பாடல் அணைத்து அப்பா, மகள்களுக்கும் பிடிக்கும் பாடலாக இருக்கும். இப்படத்தின் டப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்றது’’ என்றார். இந்தப் படத்திற்கு அகிலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மரியா மனோகர் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - டிரைலர்


;