தனுஷ், அஜித்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியுடன் இணையும் விவேக்!

தனுஷ், அஜித்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியுடன் இணையும் விவேக்!

செய்திகள் 16-Feb-2015 1:18 PM IST VRC கருத்துக்கள்

’ஜெயம்’ ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி முதலானோர் இணைந்து நடிக்கும் ’அப்பா டக்கர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பொள்ளாச்சியில் படம் பிடிக்க இருப்பதால் விவேக் இன்று பொள்ளாசி பயணமாகியுள்ளார். பொள்ளாச்சி ஷெட்யூலை முடித்ததும் இரண்டு பாடல்களை படமாக்க ‘அப்பா டக்கர்’ படக்குழுவினர் வெளிநாடு செல்லவிருக்கிறது. வெளிநாடு படப்பிடிப்புடன் இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்து விடுமாம்! தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, அஜித்தின் ‘என்னை அறிந்தால் படங்களுக்கு’ பிறகு விவேக், ‘ஜெயம்’ ரவியுடன் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;