ரீ-மேக் ஆகும் விஜயகாந்த், சத்யராஜ் படம்!

ரீ-மேக் ஆகும் விஜயகாந்த், சத்யராஜ் படம்!

செய்திகள் 16-Feb-2015 12:09 PM IST VRC கருத்துக்கள்

மணிவண்ணன் இயக்கி சூப்பர் ஹிட்டான படம் ‘நூறாவது நாள். இப்படத்தில் விஜயகாந்த், சத்யராஜ், மோகன், நளினி முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவிருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அது உறுதியாகிவிட்டது. இப்படத்தின் ரீ-மேக்கை மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனே இயக்குகிறார். ‘நூறாவது நாள்’ படத்தின் ஒரிஜினல் கதையில் சில மாற்றங்களை செய்து இப்படத்தை இயக்க இருக்கிறாராம் ரகுவண்ணன். இப்படத்தில் ‘சதுரங்கவேட்டை’ புகழ் நட்ராஜை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் ரகுவண்ணன். மற்ற கேரக்டர்களுக்கான நடிக, நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் பாடம் பயின்ற நீரோ பிரபா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;