அஜித்துடன் ஜோடி சேர்கிறார் ஸ்ருதிஹாசன்?

அஜித்துடன் ஜோடி சேர்கிறார் ஸ்ருதிஹாசன்?

செய்திகள் 14-Feb-2015 4:52 PM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான வேலைகள் பரபரப்பாக ஆரம்பமாகியுள்ளன. ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ஏ.எம்.ரத்னம் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என ரசிகர்களிடையே பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது.

இயக்குனர் சிவாவின் ஆஸ்தான நாயகியான தமன்னாவின் பெயர் முதலில் பரிசீலனையில் இருந்தது. பின்னர் சமந்தாதான் நாயகி எனவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இவர்கள் இருவருமே அஜித்துக்கு ஜோடி இல்லையாம். அஜித்துடன் டூயட் பாடப் போகிறவர் யார் தெரியுமா? கமலின் மகள் ஸ்ருதிஹாசன். இந்தத் தகவல் தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கிறது. ‘பூஜை’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தில் முதல்முறையாக கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி. இப்போது அஜித்துடனும் முதல்முறையாக ஜோடி போடவிருக்கிறது இந்த அழகு தேவதை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;