மீண்டும் ஒரு காதல் கதை!

மீண்டும் ஒரு காதல் கதை!

செய்திகள் 14-Feb-2015 2:01 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தட்டத்தின் மறயத்து’. நிவின் பாலி, இஷா தல்வர் ஜோடியாக நடித்த இப்படத்தை வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார். முஸ்லிம், ஹிந்து காதலை அழகாக சொல்லியிருந்த இப்படம் தமிழில் ரீ-மேக் ஆகியிருக்கிறது. புதுமுகங்கள் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்படத்தின் டைட்டிலை காதலர் தினத்தன்று வெளியிட விரும்பிய படக்குழுவினர் அதன்படி காதலர் தினமான இன்று பட தலைப்பை வெளியிட்டுள்ளனர். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஏற்கெனவே ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் பிரதாப் போத்தன், ராதிகா ஜோடியாக நடித்து பிரதாப் போத்தனே இயக்கி 1984-ல் ஒரு படம் வெளியாகியுள்ளது. இப்போது அதே பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;