புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

செய்திகள் 14-Feb-2015 1:08 PM IST Chandru கருத்துக்கள்

படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு நின்றுவிடாமல், அதை தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்யும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். தன்னை நாடி வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், கஷ்டப்படும் தன் ரசிகர்களை விஜய்யே தேடிச்சென்று உதவி சம்பவங்களும் நடந்ததுண்டு. இதுபோல, சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள 3 குழந்தைகளையும் வரவழைத்து நடிகர் விஜய் சந்தித்ததோடு, அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட சம்பவம் விஜய்யின் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

குழந்தைகளுடன் போட்டோ எடுப்பதில் என்ன நெகிழ்ச்சி? என்று கேட்கிறீர்களா.... சம்பந்தப்பட்ட அந்த 3 குழந்தைகளும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் சோகமயமான சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களின் ஆசை என்ன என அவர்களிடம் கேட்டபோது, நடிகர் விஜய்யை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென சொன்னார்களாம். இதை அந்த ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்ல, உடனடியாக அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, போட்டோவும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்த அந்த 3 குழந்தைகளும் சந்தோஷமாக அந்த நிமிடங்களைக் கழித்தார்கள்.

இதனை நடிகர் விஜய் பெயரில் அதிகாரபூர்வமாக செயல்படும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;