மீண்டும் சூர்யாவுடன் இணையும் சமந்தா!

மீண்டும் சூர்யாவுடன் இணையும் சமந்தா!

செய்திகள் 13-Feb-2015 1:02 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’, ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர்யூ’வின் ரீ-மேக் என இரண்டு படங்களை தயாரித்து வருவதோடு, இயக்குனர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தையும் தயாரிக்கிறது. தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் தனது மூன்றாவது தமிழ் படமாக இயக்கும் படத்திற்கு ‘24’ என்று பெயர் வைத்துள்ளார் என்றும், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்றும் இந்த படம் குறித்த சில தகவல்களை முதலில் வெளியிட்டது ‘டாப் 10 சினிமா’ தான்!. இப்போது இப்படத்தில் சூர்யாவுக்கு யார் ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ’அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த சமந்தா தான் ‘24’ படத்திலும் சூர்யாவுக்கு ஜோடி!. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தவிர பாண்டிராஜ் இயக்கும் ‘ஹைக்கூ’ படத்திலும் கெஸ்ட் ரோலில நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்


;