சிஷ்யர் படத்தை வெளியிடும் மிஷ்கின் !

சிஷ்யர் படத்தை வெளியிடும்  மிஷ்கின் !

செய்திகள் 13-Feb-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

முன்னணி இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் இயக்கிய ‘ கப்பல்’ படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க பலமாய் அமைந்தது. இப்போது இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து ‘பிசாசு’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின் தனது நெடுநாளைய சிஷ்யர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ என்ற படத்தை தனது 'Lone Wolf Productions' சார்பில் வெளியிடுகிறார். இப்படம் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மிஷ்கின் கூறும்போது,

‘‘கள்ளப்படம்’ படத்தை பார்த்தேன். என்னை பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி வெற்றிபெறும்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;