மற்றுமொரு வரலாற்று படத்தில் அனுஷ்கா!

மற்றுமொரு வரலாற்று படத்தில் அனுஷ்கா!

செய்திகள் 13-Feb-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த சத்யசாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ‘பாபா சத்ய சாய்’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இப்படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கோடி ராமாகிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் சாய் பாபா கேரக்டரில் நடிக்க ஏராளமான நடிகர்களை பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா கடைசியில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீபை தேர்வு செய்துள்ளார். சத்யசாய் பாபாவின் கேரக்டரில் திலீப் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை சில மாதங்களுக்கு முன் ‘டாப் 10 சினிமா’ வெளியிட்டிருந்தது! சத்யசாய் பாபாவின் 22 வயது முதல் அவர் மறைவது வரையிலான வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த படத்தில் சத்ய சாய்பாபாவின் பக்தையாக வரும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுஷ்கா இப்போது ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட படமான ‘பாஹுபலி’ மற்றும் குணசேகர் இயக்கி வரும் ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய சரித்திர கதைகளில் நடித்து வருகிறார்.

‘பாபா சத்ய சாய்’ படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. அதன் பிறகு ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுக்க இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘பாஹுபலி’, ‘ருத்ரம்மா தேவி’ பட வரிசையில் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்த நேரத்திலும் - டிரைலர்


;