இன்று பாலுமகேந்திரா முதலாம் ஆண்டு நினைவு நாள்!

இன்று பாலுமகேந்திரா முதலாம் ஆண்டு நினைவு நாள்!

செய்திகள் 13-Feb-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

அனைவராலும் கேமரா கவிஞர் என்று அழைக்கப்படும் பாலுமகேந்திரா இந்த உலகை விட்டு பிரிந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது! ஒளிப்பதிவில் தனகென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு இந்திய சினிமாவில் பல சாதனைகள் படைத்த பாலுமகேந்திரா, பல தரமான படங்களை இயக்கி தன்னை சிறந்த ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர்! இயற்கையையும், அதன் வெளிச்சத்தையும் மிகவும் நேசித்து அதனை தன் படைப்புகள் மூலம் கௌரவப்படுத்தி அவர் படைத்த படைப்புகள் இந்த சினிமா உலகம் இருக்கும் வரை பேசப்படும், போற்றப்படும்! பாலுமகேந்திரா இந்த பூவுலகை விட்டு சென்று விட்டாரே தவிர, கலையை, சினிமாவை நேசிக்கிற மக்கள் இருக்கும் வரை அவர் எல்லோரது உள்ளங்களிலும் என்றென்றும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார். அவர் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுகிற இந்நாளில் அவருக்கு ‘டாப் 10 சினிமா’வின் நினைவஞ்சலிகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;