ரிலீசுக்கு தயாராகும் பென்சில்!

ரிலீசுக்கு தயாராகும் பென்சில்!

செய்திகள் 12-Feb-2015 4:31 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘டார்லிங்’ படம் ஹிட்டானதால் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார் அப்படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார்! இதனை தொடர்ந்து தனது அடுத்த படமான ‘பென்சில்’ படத்தின் வேலைகளில் படு பிசியாகி விட்டார் ஜி.வி.பிரகாஷ்! மணி நாகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, ஜி,வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். ‘கல்சன் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீஸரை இம்மாதம் 19-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஒளிப்பதிவுக்கு கோபி அமர்நாத், படத்தொகுப்புக்கு ஆண்டனி என பெரும் டெக்னீஷியன்கள் பணியாற்றி வரும் இப்படம் விரைவில் ரிலீசாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - டிரைலர்


;