‘ராஞ்சனா’ ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!

‘ராஞ்சனா’ ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!

செய்திகள் 12-Feb-2015 12:04 PM IST VRC கருத்துக்கள்

‘ராஞ்சனா’ எனும் தனது முதல் ஹிந்திப் படத்தின் மூலமே பாலிவுட்டில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து கொண்டவர் தனுஷ்! இப்படத்தை தொடர்ந்து தனுஷ், தனது இரண்டாவது ஹிந்தி படமாக நடித்த ‘ஷமிதாப்’ படமும் சமீபத்தில் ரிலீசாகி, விமர்சன ரீதியாக பேசப்பட்டு நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகரான அமிதாப்பச்சனுக்கு ஈடு கொடுத்து தனுஷ் நடித்ததை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்! ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷுக்கு மேலும் சில ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் தனுஷ்! இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகி உள்ளதாம்! இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறதாம்! இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;