ஆர்.கே.யுடன் இரட்டை வேடத்தில் நடிக்கும் நீத்து சந்திரா!

ஆர்.கே.யுடன் இரட்டை வேடத்தில் நடிக்கும் நீத்து சந்திரா!

செய்திகள் 12-Feb-2015 11:34 AM IST VRC கருத்துக்கள்

ஆர்.கே.நடிப்பில் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை இயக்கிய ஷாஜி கைலாஸ் மீண்டும் அதே ஆர்.கே. நடிப்பில் இயக்கியுள்ள படம் ‘என் வழி தனி வழி’. அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் மற்றுமொரு படத்தில் நடிக்கிறார் ஆர்.கே. ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்று டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் பூஜை வருகிற 16-ஆம் தேதி ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் நீத்து சந்திரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இனியா, சுஜா வாருண்ணி, கோமல் சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஷாஜி கைலாஸும், ஆர்.கே.யும் இணையும் மூன்றாவது படமான இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ஆர்.கே.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;