‘என்னை அறிந்தால்’ பற்றி திடீர் வதந்தி!

‘என்னை அறிந்தால்’ பற்றி திடீர் வதந்தி!

செய்திகள் 12-Feb-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து இதன் இரண்டாம் பாகத்தையும் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார் என்றும், இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கிறார் கௌதம் மேனன் என்றும் சில இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் அப்படி ஒரு திட்டம் கௌதம் மேனனுக்கும், அஜித்துக்கும் இல்லையாம்! அந்த செய்திகள் வெறும் வதந்தியாம்! ‘என்னை அறிந்தால்’ படம் வெளியானதை தொடர்ந்து கௌதம் மேனன் சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் பிசியாகியுள்ளார். இந்தப் படத்தை முடித்த பிறகு தான் தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்க உள்ளாராம் கௌதம் மேனன்! அதைப்போல ‘என்னை அறிந்தால்’ படம் வெளியான நிலையில் ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு தான் அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாரார் என்றும், அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;