‘அனேகன்’ வழக்கு… நீதிமன்ற தீர்ப்பு!

‘அனேகன்’ வழக்கு… நீதிமன்ற தீர்ப்பு!

செய்திகள் 12-Feb-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ திரைப்படம் நாளை (13-2-15) ரிலீசாகவிருக்கிற நிலையில் நேற்று மதுரை நீதிமன்றத்தில் தமிழ்நாடு திருகுறிப்பு தொண்டநாயனார் மகாசபை தலைவர் எஸ்.மாரிச்செல்வம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள அனேகன் திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெணகளை இழிவுப்படுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘அனேகன்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘ மனுதாரர் தனது கோரிக்கைக்காக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’’ என்று உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;