சல்மான்கான், அக்‌ஷய்குமார், மகேஷ் பாபு வரிசையில் விஷால்!

சல்மான்கான், அக்‌ஷய்குமார், மகேஷ் பாபு வரிசையில் விஷால்!

செய்திகள் 12-Feb-2015 10:31 AM IST VRC கருத்துக்கள்

‘பாண்டிய நாடு’ படத்தை தொடர்ந்து ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, ‘ஆம்பள’ என அதிரடி ஆக்‌ஷன் படங்களில் வெளுத்து கட்டிய விஷால் தற்போது சுசீந்தரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலே குறிப்பிட படங்கள் மூலம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய விஷால் தான் ‘தம்ப்ஸ் அப்’ குளிர்பான கம்பெனியின் அடுத்த பிராண்ட் அம்பாசிடர்! சமீபத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் விரைவில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் விஷால்!

கடந்த காலங்களில் ‘தம்ப்ஸ் அப்’பின் விளம்பர தூதுவர்களாக இருந்தவர்கள் பிரபல ஆக்‌ஷன் ஹீரோக்களான சல்மான்கான், அக்‌ஷய குமார், மகேஷ் பாபு முதலானோர் வரிசையில் இப்போது விஷாலும் சேர்ந்து விட்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹிப் ஹாப் தமிழா - டக்கரு டக்கரு மியூசிக் வீடியோ


;