தனுஷ், சிவார்த்திகேயனின் ஸ்பெஷல் பிப்ரவரி!

தனுஷ், சிவார்த்திகேயனின் ஸ்பெஷல் பிப்ரவரி!

செய்திகள் 11-Feb-2015 6:16 PM IST Chandru கருத்துக்கள்

‘3’ படத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தார்கள். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக தன்னுடைய ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் சிவகார்த்திகேயனை நாயகனாக்கி ‘எதிர்நீச்சல்’ படத்தை தயாரித்தார் தனுஷ். படம் அதிரிபுதிரி ஹிட்டாக அதன் பிறகு வரிசையாக சிவகார்த்திகேயனுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அந்த நன்றியை எல்லா மேடைகளிலும் சொல்லி பெருமைப்படுபவர் சிவகார்த்திகேயன். இப்போதுகூட தனுஷின் தயாரிப்பில் ‘காக்கி சட்டை’ படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படி குரு, சிஷ்யனாக தமிழ் சினிமாவை கலக்கி வரும் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இந்த பிப்ரவரி மாதம் ரொம்பவே ஸ்பெஷல். ஆம்... கடந்த 6ஆம் தேதி தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படம் வெளிவந்து ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. அதோடு வரும் 13ஆம் தேதி தனுஷின் ‘அனேகன்’ படம் உலகெங்கும் 1000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘அனேகன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அனேகுடு’ படம் 20ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதேபோல் இம்மாதம் 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள். தவிர... தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘காக்கி சட்டை’ படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதுகுறித்து தனுஷ், ‘‘பிப்ரவரி... இது ‘லோக்கல் பாய்ஸி’ன் மாதம்!’’ என சந்தோஷமாக ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;