கல்யாணம் குறித்து நமீதா பரபரப்பு தகவல்!

கல்யாணம் குறித்து நமீதா பரபரப்பு தகவல்!

செய்திகள் 11-Feb-2015 5:36 PM IST VRC கருத்துக்கள்

‘‘பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் விரையில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்’’ என்று நடிகை நமீதா கூறியது மாதிரி சில இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்ததது. ஆனால் இந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறி நடிகை நமீதா அவரது பி.ஆர்.ஓ.மூலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

‘‘நான் கல்யாணம் பண்ணிக் கொள்வது பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாக பரவி வருகிற செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. கல்யாணம் என்ற பேச்சுக்கே எனது மனதில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எனது எண்ணம்! அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன். எப்போதும் எனக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை நண்பரகளுக்கு நன்றி! இனியும் அதே அன்போடு ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று நமீதா அதில் கூறிப்பிட்டுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;