‘ஹைக்கூ’ படைக்கும் இயக்குனர் பாண்டிராஜ்!

‘ஹைக்கூ’ படைக்கும் இயக்குனர் பாண்டிராஜ்!

செய்திகள் 11-Feb-2015 5:04 PM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ’ஹைக்கூ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குழுந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் பேபி வைஷ்ணவி, மாஸ்டர் நிஷேஷ் நடிக்க பிந்துமாதவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் சூர்யா, அமலா பால் ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் நடிக்கிறர்கள். தற்போது 2டி நிறுவனம், ஜோதிகா நடிப்பில் மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர்யூ’வின் ரீ-மேக்கை தயாரித்து வருகிறது. ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி வரும் இப்படத்துடன் பாண்டிராஜ் இயக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் வேலைகளும் இபோது சுறுசுறுப்படைந்துள்ளது! இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை பிரவீன் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;