அரண்மனை, பிசாசு வரிசையில் நயன்தாராவின் ‘மாயா’

அரண்மனை, பிசாசு வரிசையில் நயன்தாராவின் ‘மாயா’

செய்திகள் 11-Feb-2015 5:04 PM IST Chandru கருத்துக்கள்

‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் வித்தியாசமான ஹாரர் படம் ‘மாயா’. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். ‘நெடுஞ்சாலை’ ஆரி, ‘வல்லினம்’ அம்ஜத், ரோபோ சங்கர் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு சத்யா, இசைக்கு ரான் யோஹான், எடிட்டிங்கிற்கு டி.எஸ்.சுரேஷ் என ‘யூத்’ கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டிரைலரும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் ‘மாயா’வின் தமிழக வெளியீட்டு உரிமையை ராம நாராயணின் ‘ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே அரண்மனை, பிசாசு போன்ற பேய் படங்களையும் இந்நிறுவனமே வாங்கி வெளியிட்டது. அதேபோல், அருள்நிதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘டிமான்டி காலனி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது. தொடர்ந்து பேய்ப் படங்களை வெளியிட்டு கல்லா கட்டி வரும் இந்நிறுவனம் தற்போது ‘மாயா’வையும் வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;