கார்த்தியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்!

கார்த்தியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்!

செய்திகள் 11-Feb-2015 5:04 PM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து கார்த்தி, ‘பிவிபி சினிமா’ நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. இப்படத்தில் நாகார்ஜுனா, கார்த்தியுடன் ஸ்ருதிஹாசன், அவாரா சாஸ்திரி, ஜெயசுதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 16-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. ஹைதராபாத், சென்னை மற்றும் சில வெளிநாடுகளில் படமாக இருக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இப்படத்தினை திரைக்கதை எழுதி வம்சி பய்டிபள்ளி இயக்குகிறார். ‘மனம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;