உதயநிதியிடம் கோரிக்கை வைத்த பிந்து மாதவி!

உதயநிதியிடம் கோரிக்கை வைத்த பிந்து மாதவி!

செய்திகள் 11-Feb-2015 12:11 PM IST VRC கருத்துக்கள்

‘‘இந்த மேடைக்கு வரும்போதே என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பத்திரிகையாளர் சொல்லி அனுப்பினார்… ‘ஏதாவது கான்ட்ரவர்சியாக பேசுங்கள், அப்போ தான் நாங்க ஏதாவது எழுத முடியும்’னு! ஏன் கடந்த ஒரு வருஷமாக எந்த கான்ட்ரவர்சியும் இல்லாம நல்லா தானே போய்கிட்டிருக்கு! அப்புறம் எதுக்கு சார்…?’’ இப்படி பேச ஆரம்பித்தார் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்பட ஹீரோயின்களில் ஒருவரான பிந்து மாதவி! தொடர்ந்தவர், ‘‘இப்படத்தில் நடித்து முடித்ததோடு சரி, படத்தை இன்னும் பார்க்கவில்லை! படத்தை போட்டு காட்டுவீர்களா உதயநிதி சார்?’’ என்று இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிட இருக்கும் உதயநிதி ஸ்டாலினை பார்த்து பிந்து மாதவி கேட்க, அதற்கு உதயநிதியும் ‘‘கண்டிப்பாக ஷோ உண்டு” என்று பதில அளித்தார்! இதனை தொடர்ந்து எல்லோருக்கும் நன்றி கூறியவாறு தனது உரையை முடித்துக் கொண்டார் பிந்து மாதவி!
இயக்குனர் எம்.சரவணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். வி.எல்.எஸ்.ராக் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட்ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வருகிற 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பசங்க 2 - தம் தம் பாடல் வீடியோ


;