தனுஷின் அண்ணனும், தம்பியும் இணையும் படம்!

தனுஷின் அண்ணனும், தம்பியும் இணையும் படம்!

செய்திகள் 11-Feb-2015 10:21 AM IST Chandru கருத்துக்கள்

‘தனுஷுக்கு அண்ணன் இயக்குனர் செல்வராகவன்.... அது யாருப்பா தனுஷுக்கு தம்பி?’ என தலைப்பைப் படித்ததும் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம் ரசிகர்களே... தம்பி என்று சொன்னது வேறு யாரையுமல்ல... நம்ம எஸ்.டி.ஆர் சிம்புவைத்தான். அதுவும் தம்பி என்று தனுஷே தன் ட்வீட்டில் குறப்பிட்டிருக்கிறார்.

சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. அதோடு பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. ‘இரண்டாம் உலகம்’ படத்தை முடித்த கையோடு இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பிறகு செல்வராகவன் திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாகிவிட்டதால் அதைப்பற்றியே பேச்சு அப்படியே அமுங்கிப்போனது. தற்போது தனுஷ் தன் ட்வீட்டில், ‘‘என் அண்ணன் செல்வராகவனும், தம்பி எஸ்.டி.ஆரும் இணைகிறார்கள். ஆல் த பெஸ்ட் சகோதரர்களே... இது கண்டிப்பாக சிறந்த படமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். சிறந்த இயக்குனரிடமிருந்து கற்றுக் கொள்ள தயாராக இருங்கள் சிம்பு!’’ என குறிப்பிட்டிருக்கிறார். பதிலுக்கு சிம்புவும், ‘‘மிக்க நன்றி... ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!’’ என பதில் ட்வீட் அடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;