காதலர் தினத்தன்று ஜி.வி.யின் புதிய அறிவிப்பு!

காதலர் தினத்தன்று ஜி.வி.யின் புதிய அறிவிப்பு!

செய்திகள் 11-Feb-2015 10:21 AM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் நிவின் பாலி, இஷா தல்வார் ஜோடியாக நடித்து, வினீத் சீனிவாசன் இயக்கிய படம் ‘தட்டத்தின் மறயத்து’. சூப்பர் ஹிட்டான இப்படம் தமிழிலும் ரீ-மேக் ஆகி வருகிறது. சில புதுமுகங்களை நடிக்க வைத்து மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிகாஷ் குமார் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டிலை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிக்க உள்ளனர். ‘பிளாக் டிக்கெட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘ ‘கலைப்புலி இன்டர்நேஷனல்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த தகவலை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;