மார்ச் 6ல் திறக்கிறது சித்தார்த்தின் கனவு உலகம்!

மார்ச் 6ல் திறக்கிறது சித்தார்த்தின் கனவு உலகம்!

செய்திகள் 11-Feb-2015 10:02 AM IST Chandru கருத்துக்கள்

‘காவியத்தலைவன்’ படத்திற்குப் பிறகு சித்தார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘எனக்குள் ஒருவன்’. சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை பிரசாத் ராமர் இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் ‘கூட்டு நிதி’யின் மூலம் உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற ‘லூசியா’ திரைப்படம்தான் தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ படமாக ரீமேக் ஆகியிருக்கிறது. சித்தார்த்துக்கு ஜோடியாக தீபா சன்னிதி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள், டீஸர், டிரைலர் என இப்படம் அனைத்து வகையிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனவில் ஒரு வாழ்க்கை, நிஜத்தில் ஒரு வாழ்க்கை என ஹீரோ சித்தார்த்தின் இரண்டுவிதமான வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் நகர்கிறது. இப்படத்தை வரும் மார்ச் 6ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்கிறது ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;