‘பாம்பு சட்டை’ நாளைமுதல் படமெடுக்கிறது...!

‘பாம்பு சட்டை’ நாளைமுதல் படமெடுக்கிறது...!

செய்திகள் 10-Feb-2015 3:57 PM IST Chandru கருத்துக்கள்

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் ‘மேஜிக் ஃப்ரேம்ஸ்’ நிறுவனம் மற்றும் இயக்குனர் மனோபாலா அவர்களின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு நாளை (பிப்ரவரி 11) துவங்குகிறது. பாபி சிம்ஹா கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் ‘ரஜினி முருகன்’, ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களின் நாயகி கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில் ‘தாமிரபரணி’ பானுவும் நடிக்கிறார்.

‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் சங்கரின் இணை இயக்குனர் ஆவார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். படத்தை பற்றி தயாரிப்பாளர் மனோபாலா கூறும்பொழுது...

‘‘எனது முதல் தயாரிப்பான ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றியை மதிக்கின்றேன். ரசிகர்களை கவரும் வண்ணம் அடுத்த தயாரிப்பும் இருக்க வேண்டும், நல்ல படங்களைத் தயாரிப்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்று எண்ணினேன். ஆடம் தாசன் இந்த கதையை கூறிய உடனே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்தேன். நாளை முதல் இப்படத்தின் படப்பதிவு தொடங்கவுள்ளது” என பெருமிதத்துடன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;