அஜித் படத்தில் அனிருத்?

அஜித் படத்தில் அனிருத்?

செய்திகள் 10-Feb-2015 11:32 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படங்களைத் தொடர்ந்து இப்படத்தையும் ஏ.எம்.ரத்னம்தான் தயரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது மாரி, ஆக்கோ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அதோடு முதல்முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றிற்கும் இசையமைக்கவிருக்கிறார்.

‘கத்தி’ படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பே பேட்டி ஒன்றில் ‘விரைவில் விஜய், அஜித் படங்களுக்கு இசையமைப்பேன்’ என்று கூறியிருந்தார் அனிருத். இதனால் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் ஒப்பந்தமான ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமானதால் அந்த பேச்சு அதோடு முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது ‘வீரம்’ சிவா இயக்கும் படத்தின் மூலம் அஜித்தோடு பணிபுரிய வேண்டுமென்ற அனிருத்தின் ஆசை நிறைவேறப்போகிறது.

அஜித்தின் 56வது படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ ஆகியவை தவிர மற்ற விஷயங்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் அனைத்துத் தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - டிரைலர்


;