கௌதம் மேனனின் அடுத்த பட நாயகன் விக்ரம்?

கௌதம் மேனனின் அடுத்த பட நாயகன் விக்ரம்?

செய்திகள் 10-Feb-2015 9:50 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த 5ஆம் தேதி வெளியான ‘என்னை அறிந்தால்’ படம் தந்த வெற்றியால் மீண்டும் உற்சாகத்திற்குத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நல்லவிதமான கமென்ட்டுகள் கிடைத்திருப்பதால் தன் அடுத்த படம் குறித்த சிந்தனையில் ஆர்வமாக இருக்கிறார் கௌதம். தற்போது சிம்புவை வைத்து ஏற்கெனவே தொடங்கிய படத்தை இயக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

இது ஒருபுறமிருக்க, சிம்பு படம் முடிந்ததும் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை கௌதம் இயக்கப்போவதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விக்ரமை சந்தித்து தன்னிடம் இருக்கும் கதையை அவரிடம் கௌதம் சொன்னதாகவும், அது அவருக்கு பிடித்துவிட்டதால், அதனை திரைக்கதையாக்கும் பணியில் கௌதமின் டீம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். விஜய்யை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ படத்தின் கதையைத்தான் கொஞ்சம் திருத்தி தற்போது விக்ரமிற்கு கூறியிருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதுகுறித்து கௌதம் மேனன் இன்னும் எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது விஜய் மில்டன் இயக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் படு பிஸியாக இயங்கி வருகிறார் விக்ரம். இப்படத்தின் ஷூட்டிங், டப்பிங் வேலைகள் ஏப்ரலுக்குள் முடிந்துவிடும் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் படத்தில் விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது. அதோடு மீண்டும் விஜய் மில்டனுடன் இன்னொரு படத்திலும் விக்ரம் நடிக்க இருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;