அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ : 4 நாள் வசூல் விவரம்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ : 4 நாள் வசூல் விவரம்

செய்திகள் 9-Feb-2015 5:22 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகமெங்கும் கடந்த 5ஆம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு ‘என்னை அறிந்தால்’ குறித்த விமர்சனங்களும் ஓரளவுக்கு பாசிட்டிவாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் இப்படம் எதிர்பார்த்ததைப்போலவே நல்ல வசூல் செய்து வருகிறது. முதல் 4 நாட்களில் மட்டும் இந்தியாவில் இப்படம் கிட்டத்தட்ட 54 கோடி ரூபாய் (தோராய மதிப்பீடு) வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் 4 நாள் வசூல் 40 கோடியை எட்டியுள்ளதாம். அதேபோல் கேரளாவில் 5.5 கோடியையும், கர்நாடகாவில் 6.5 கோடியையும், மற்ற மாநிலங்களில் 1.5 கோடியையும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தோராய மதிப்பீடு எதுவும் வெளிவரவில்லை.

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் வரியுடன் கூடிய ‘Gross’ தொகை என்பது குறிப்பிடத்தக்கது.)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;