சென்சாருக்கு பிறகு ரீ-ஷூட் ஆகும் வஜ்ரம்!

சென்சாருக்கு பிறகு ரீ-ஷூட் ஆகும் வஜ்ரம்!

செய்திகள் 9-Feb-2015 1:16 PM IST VRC கருத்துக்கள்

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் ‘வஜ்ரம்’. பள்ளி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை வருகிற 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக சென்சாருக்கு அனுப்பிய ‘வஜ்ரம்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள், படத்தில் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது மாதிரி நிறைய காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு நிறைய கட் கொடுத்து ‘ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்குவதாக கூறி இருக்கிறார்கள். இதனால் கலங்கிப்போன பட குழுவினர் படத்திற்கு எப்படியாவது ‘யு’ சான்றிதழ் வாங்க வேண்டும் என்று இப்போது படத்தின் சில காட்சிகளை மறு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இதனால் ‘வஜ்ரம்’ திட்டமிட்டபடி 20 ஆம் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது! ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி நால்வரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்தில் பவானி ரெட்டி என்ற புதுமுகம் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுவாதி கொலை வழக்கு - trailer


;