சினிமாவில் பிஸியாகும் ‘க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ்குமார்!

சினிமாவில் பிஸியாகும் ‘க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ்குமார்!

செய்திகள் 9-Feb-2015 12:55 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் நாவல் உலகில் முடிசூடா ‘க்ரைம் கதை மன்னனாக’ ஜொலித்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவருடைய சமகால எழுத்தாளர்களான சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சினிமாவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தாலும் ராஜேஷ்குமார் இதுவரை திரையுலகைவிட்டு சற்று விலகியே இருந்தார். இப்போது அவர் சினிமா பயணத்திலும் தன் கவனத்தை செலுத்தத் தொடங்கி உள்ளார்.

வரும் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘சண்டமாருதம்’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் ராஜேஷ்குமார்தான். ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த கதையில் வரும் ‘ஒப்வா லசிகா’ படம் பார்ப்பவர்களை கண்டிப்பாய் மிரள வைக்கும் என்கிறார் படத்தின் திரைக்கதை ஆசிரியரான ராஜேஷ்குமார்.

அதோடு, பிரபல வாரஇதழ் ஒன்றில் வெளிவந்த ‘வெல்வெட் குற்றங்கள்’ என்ற ராஜேஷ்குமாரின் தொடர்கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. இதற்காக இந்த தொடர்கதை ஆங்கில மொழியாக்கம் செய்யப்படும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காணாமல் போன மலேசியன் விமான சம்பவத்தை மையமாக வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வெல்வெட் குற்றங்கள்’ தொடர்கதை விரைவில் ஹிந்தி படமாக உருவாகும் என்று நம்பப்படுகிறது.

இந்த இரண்டு புராஜெக்ட்களைத் தொடர்ந்து ‘2000 சதுர அடி சொர்க்கம்’ என்ற படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராஜேஷ்குமார். விஜய ஜெய சாமுண்டேஸ்வரி பட நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘த்ரில்லர்’ ரகமாக உருவாகவிருக்கிறது. அகஸ்டியன் இயக்கும் இப்படத்தில் பணியாற்றவிருப்பவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;