மணிரத்னம் படத்தின் புதிய டைட்டில்!

மணிரத்னம் படத்தின் புதிய டைட்டில்!

செய்திகள் 9-Feb-2015 12:31 PM IST VRC கருத்துக்கள்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிரத்னம் ஏற்கெனவே இயக்கிய ‘ரோஜா’ ‘அலைபாயுதே’ பட வரிசையில் இப்படமும் ரொமான்டி காதல் கதையாக உருவாகி இருக்கிறதாம்! இப்படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என்று டைட்டில் வைத்திருந்த நிலையில் இப்போது அந்த டைட்டிலை மாற்றி ‘ஓ காதல் கண்மணி’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் வைக்கப்பட்ட டைட்டிலையும், இப்போது வைக்கப்பட்டுள் ‘ஓ காதல் கண்மணி’ என்ற டைட்டிலையும் இன்னும் மணிரத்னம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கும் மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைப்பாளர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;