25 நாட்களை கடந்த டார்லிங்!

25 நாட்களை கடந்த டார்லிங்!

செய்திகள் 9-Feb-2015 11:24 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற பல படங்களை சொல்லலாம்! அந்த வரிசையில் பொங்கலையொட்டி ஷங்கரின் ‘ஐ’ மற்றும் விஷாலின் ‘ஆம்பள’ படங்களுடன் வெளியாகிய ‘டார்லிங்’ படமும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ‘டார்லிங்’ வெளியாகி நேற்றுடன் 25-ஆவது நாள்! அல்லு அரவிந்தின் ‘கீதா ஆர்ட்ஸ்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான முதல் படம் இது! ‘டார்லிங்’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் இப்பட குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;