சிம்பு, நயன்தாரா ஜோடிக்கு கிடைத்த 3 மில்லியன்!

சிம்பு, நயன்தாரா ஜோடிக்கு கிடைத்த 3 மில்லியன்!

செய்திகள் 9-Feb-2015 10:55 AM IST Chandru கருத்துக்கள்

‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா, சூரி, சந்தானம் ஆகியோரும் நடிக்கிறார்கள். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் சிம்புவின் தம்பி குறளரசன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியானது.

கிட்டத்தட்ட 3 வாரங்களில் இந்த டீஸர் 30 லட்சம் (3 மில்லியன்) பார்வையிடல்களைக் கடந்திருக்கிறது. சிம்புவின் கேரியரில் அவரின் டீஸருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு இதுதான். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகியோருக்குப் பிறகு சிம்புவும் இந்த சாதனையைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்திலிருக்கிறார்கள்.

சிம்புவின் ‘வாலு’ மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் இறுதியில் ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;