தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டுவாரா அனிருத்!

தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டுவாரா அனிருத்!

செய்திகள் 9-Feb-2015 9:53 AM IST Chandru கருத்துக்கள்

தமிழில் ‘3’ படத்தின் மூலம் அதிரடியாக அறிமுகமான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இதுவரை 7 தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதும் 3 தமிழ் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து ஆல்பங்களுக்குமே இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக அவரின் ஆல்பங்கள் ‘ஐ டியூன்ஸி’ல் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

அனிருத்தின் இந்த அபாரமான வெற்றியை தற்போது தெலுங்கு திரையுலகமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. ‘தூக்குடு’ படத்தை இயக்கிய ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் படத்திற்காக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்காக ஒரு சில ட்யூன்களை உருவாக்கி அதை அவர்களிடம் அனிருத் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழைப்போல தெலுங்கிலும் அனிருத் பெரிய வெற்றியைப் பெறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;