விஜய் படத்தில் இணைகிறாரா ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்?

விஜய் படத்தில் இணைகிறாரா ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்?

செய்திகள் 9-Feb-2015 9:36 AM IST Chandru கருத்துக்கள்

அவ்வப்போது ஒரு சில தமிழ்ப்படங்களில் ‘கெஸ்ட்ரோலி’ல் தலைகாட்டி வரும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘ஐ’ படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்திலும் பவர்ஸ்டாருக்கு ஒரு வித்தியாசமான வேடம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக இந்த செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும், படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதால், ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பவர்ஸ்டாரை வித்தியாசமான தோற்றத்தில் ‘புலி’யில் நடிக்க வைக்கும் எண்ணம் இயக்குனர் சிம்புதேவனுக்கு இருக்கிறதாம். இதுகுறித்து தயாரிப்பாளர், நடிகர் விஜய் ஆகியோரிடம் பேசிவிட்டு இறுதி முடிவு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

பவர்ஸ்டார் தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கிவரும் ‘ஜெயிக்கிற குதிரை’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர இன்னும் ஒன்றிரண்டு தமிழ் படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;