‘பிகே’ தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கமல்?

‘பிகே’ தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கமல்?

செய்திகள் 9-Feb-2015 9:09 AM IST Chandru கருத்துக்கள்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் வேற்றுகிரகவாசியாக நடித்து வெளிந்த ‘பிகே’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து இன்னும் வெற்றிகரமாக பல தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் கிட்டத்தட்ட 500 கோடிகளை சம்பாதித்திருக்கும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பலத்த போட்டா போட்டி நிலவியது.

முதலில் இப்படத்தில் விஜய் நடிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ‘3 இடியட்ஸ்’ தமிழ் ரீமேக்கான ‘நண்பனி’ல் அமீர் கான் கேரக்டரில் விஜய் நடித்திருந்ததால் இந்த வதந்தி பரவியது. ஆனால், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ‘பிகே’ ரீமேக்கில் நடிப்பதற்கு உலகநாயகன் கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ‘பிகே’யின் ரீமேக் உரிமையை ஜெமினி புரொடக்ஷன்ஸ் வாங்கியிருக்கிறதாம்.

தற்போது கமல் பாபநாசம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை ரிலீஸ் செய்யும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ‘உத்தமவில்லன்’ படம் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ‘பாபநாசம்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘பிகே’ ரீமேக்கிற்கான படப்பிடிப்பு அனேகமாக மே மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;