வாங்கண்ணா வணக்கங்கண்ணா… ரிப்பீட்டு!

வாங்கண்ணா வணக்கங்கண்ணா… ரிப்பீட்டு!

செய்திகள் 7-Feb-2015 5:00 PM IST VRC கருத்துக்கள்

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வரும் விஜய் இந்த படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 59-ஆவது படமான இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். விஜய் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக இசை அமைத்த படம் ‘தலைவா’. இப்படத்தில் வரும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா..’ என்ற பாடலை விஜய்யை பாட வைத்த ஜி.வி.பிராகாஷ் அட்லி இயக்கும் படத்திற்காகவும் விஜய்யை ஒரு பாடல் பாட வைக்க இருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷே தெரிவித்துள்ளார். அட்லி முதன் முதலாக இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். இந்தப் படமும், பாடல்களும் வெற்றி பெற்றதால் அதே கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது. அட்லி இயக்கும் இரண்டாவது படமான இது, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;