முதன் முதலாக த்ரிஷாவுடன் இணையும் ஜெய்!

முதன் முதலாக த்ரிஷாவுடன் இணையும் ஜெய்!

செய்திகள் 7-Feb-2015 11:54 AM IST VRC கருத்துக்கள்

ஜெய் நடித்துள்ள ‘வலியவன்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து திரு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக முதன் முதலாக த்ரிஷா நடிக்கிறார். த்ரிஷாவை திருமணம் செய்யவிருக்கும் வருண்மணியனின் ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனமும், சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜனின் ‘ஃபிலிம் டிபார்ட்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கும்பகோனம் பகுதிகளில் படமாகவிருக்கிறது. ஏற்கெனவே திரு இயக்கிய ‘சமர்’ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார்! திரு இயக்கத்தில் மீண்டும் த்ரிஷா நடிக்கும் இப்படத்தில் த்ரிஷாவுக்கு ‘சாமி’ படத்தில் நடித்தது மாதிரியான ஹோம்லி கேரக்டராம். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்விருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;